search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கணக்கெடுப்பு"

    திருப்பூர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் பெறுபவர்கள் கணக்கெடுப்பு மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாரத பிரதமரின் கிஸான் திட்டம் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் விபரங்களை கணினியில் உள்ளீடு செய்யும் பணி மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு ஒரு முறை சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குதல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி தலைமையில் தாங்கினர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் மற்றும் கலெக்டர் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 10-ந்தேதி சட்ட மன்ற பேரவை விதி எண்.110-ன் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு ஒரு முறை சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குதல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மற்றும் பாரதப் பிரதமரின் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    முன்னதாக, மேலாண்மை இயக்குநர் மற்றும் கலெக்டர் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி, காங்கயம் தாசில்தார் அலுவலகம், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற்று வரும் சிறு, குறு விவசாயிகள் குறித்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், தாராபுரம் சப்-கலெக்டர் கிரேஷ் பச்சாவு, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி கமி‌ஷனர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    பிரதமர் மோடியில் கிசான் சமான் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெற தகுதியான விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது. #FarmersAid #KissanSammanScheme
    சென்னை:

    நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சமான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இதில் முதல் தவணை தொகையான ரூ. 2 ஆயிரத்தை அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்துக்குள் அனைவரது வங்கி கணக்கிலும் செலுத்திவிட தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கான பணிகள் அனைத்து மாநிலங்களிலும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இந்த திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    கணக்கெடுப்பு பணி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது. அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் இந்த கணக்கெடுப்பை நடத்துகிறார்கள். இதற்காக தனி விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.



    அதில் பெயர், பிறந்த தேதி, தொழில், ஆதார் எண், வங்கி கணக்கு எண், விவசாயி பெயரில் இருக்கும் விவசாய நிலத்தின் சர்வே எண், பரப்பளவு, பட்டா எண், மொபைல் எண் உள்பட 23 விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

    இந்த விபரங்களுடன் புகைப்படத்தையும் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் இருக்கும் விபரங்கள் சரிதானா? என்பதை கிராம நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். #FarmersAid #KissanSammanScheme

    ×